‘குளங்களைக் கரைசேர்ப்போம்' கட்டுரை மிகவும் அவசியமான ஒன்று. மன்னர்கள் காலத்தில் ஊர் நலம் பெறவும், மக்கள் வளம் பெறவும் ஊருக்கு ஊர் குளங்களை வெட்டினார்கள்.
அவற்றைப் பராமரிக்கவும் செய்தார்கள். ஆனால், நாளடைவில் நகர்மயமாக்கல் காரணமாக குளங்களையும் குட்டைகளையும் பிளாட் போட்டு விற்றுவிட்டு, தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலத்திடம் கையேந்தி நிற்கிறோம். ஏரிகளும் குளங்களும் குட்டைகளும் நிறைய இருந்தக் காலத்தில், பயிர்த்தொழில் செழுமையாக இருந்தது.
ஆனால் இன்று? தண்ணீருக்காகக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பொதுநலம் இல்லாத தலைவர்களும் தன்னலமே முதன்மையாகக் கருதும் மக்களும் உள்ள வரை இந்த அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
- கேசவ்பல்ராம்,திருவள்ளூர்.