சுற்றுச்சூழல் சீர்கேடு, புவி வெப்பமயமாதல் என்று சுற்றுச்சூழல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், மரங்களை வெட்ட பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருப்பது மனதுக்கு ஆறுதல் தருகிறது.
ஆனால், இது மட்டும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான ஆயுதமாகிவிடாது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவோருக்கும், அதற்கு உடந்தையாய் இருப்போருக்கும் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
தேசிய அளவில் மரங்கள் நடும் நிகழ்வுகள் காட்சிக்காக மட்டுமின்றி, பெருமளவில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கும் சட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். அதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படக் கூடாது.
- ம. பென்னியமின்,பரளியாற்.