இப்படிக்கு இவர்கள்

உண்மையான முஸ்லிம்; சிறந்த இந்தியர்

செய்திப்பிரிவு

மவுலானா அபுல் கலாம் ஆஸாத் பற்றி இன்றைய தலைமுறை அறியாத பல விஷயங்களைக் கட்டுரையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார். தேசத்தின் தலைவர்கள்பற்றிப் பேசுமிடத்திலெல்லாம் ஆஸாத் குறித்து மவுனம் நிலவுவது நாம் அறிந்ததே. ஆள்பவர்களின் கொள்கைக்காகக் கல்வியை வளைக்கும் இச்சூழலில், தேசத்தின் முதல் கல்வி அமைச்சராக அவரின் சாதனை பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கியம், ஓவியம், இசை, பல்கலைக்கழகங்கள் எனப் பல துறைகளின் வளர்ச்சிக்கு அவரே விதை. ‘‘நான் உண்மையான முஸ்லிம்; அதே நேரத்தில் சிறந்த இந்தியன். இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை’’ என முழங்கிய அபுல் கலாம் ஆஸாத் போன்றவர்களே மத சகிப்புத்தன்மை குறைந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தியாவுக்கான தேவையாகும்.

- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT