‘சாபமாக்கிவிட வேண்டாம் மழை தந்த பரிசை’ தலையங்கக் கருத்துகளோடு இதையும் சேர்த்துக்கொள்ளலாம். மழை பெய்து நிலத்தையும் உழவர்களின் மனங்களையும் குளிரவைத்துள்ளது.
சாலை விரிவாக்கம், மனைப் பிரிவுகள் உருவாக்கம் போன்றவற்றின் காரணமாகப் பெரும்பாலான மரங்கள் காணாமல் போய்விட்டன. பகல் வேளைகளில் சாலைகள் கண்களை எரிக்கின்றன. பல்வேறு காலங்களில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் செடிகள் நடப்பட்டாலும், மழைக் காலத்தில் வைக்கப்படும் செடிகள் விரைவில் வளர்வது மட்டுமன்றி, அதிகப் பராமரிப்பும் தேவைப்படாமல் தானே வளரும் தன்மையுடையவை. எனவே, செடிகளைத் தற்போது நடுவது பல தலைமுறைகளுக்குச் சீதனமாக இருக்கும்!
- அ. மயில்சாமி,கண்ணம்பாளையம்.