கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்ற உபகரணங்கள் வாங்கக் கொடுத்த பணத்தை அதற்குப் பயன்படுத்தாது, விலை உயர்ந்த டிவி-க்களை வாங்கிக்கொண்ட 300 கீழ் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த செய்தி படித்து வருந்தினேன். நீதிபதிகளும் இந்தச் சமூகத்திலிருந்து வருபவர்கள்தான். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே அரசு நிதியைத் தவறாகக் கையாண்டால், இவர்கள் வழங்கும் நீதி எத்தகையதாக இருக்கும்? அரசியல்வாதிகளின் ஊழல்குறித்து கடுமையாகத் தீர்ப்பளித்து அவர்களுக்குப் பக்கம் பக்கமாக அறிவுரை சொல்லும் நீதிபதிகள், அதே அறிவுரையைத் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்வார்களா?
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.