மவுலானா அபுல் கலாம் ஆஸாத் குறித்த கட்டுரை அவரைப் பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துச் சொல்லியது. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகியும் கல்வியில் அவர் கண்ட கனவு நனவாகவில்லை. ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம் உள்ளது. மவுலானா இறக்கும்போது அவர் பெயரில் இருந்த சொத்துக்களைப் பற்றி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது மனம் நெகிழ்ந்தது. கட்டுரையைப் படித்து முடித்த பின் தலைப்பை மீண்டும் படிக்கத் தூண்டியது.
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.