இப்படிக்கு இவர்கள்

மக்கள் விரோத இயல்பு

செய்திப்பிரிவு

‘தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்’ என்ற செய்தியைப் படித்து கொதித்துப் போனேன். மீட்டர் கட்டணம் பற்றிய அரசின் உத்தரவை, கோவையில் உள்ள ஆட்டோக்காரர்கள் புறக் கணித்து, பலமுறை மக்கள் விரோத இயல்போடு நடந்துகொண்டிருக் கிறார்கள்.

ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் மூன்று கி.மீ-க்குள்தான் இருக்கும். ஒரு ஆட்டோக்காரராவது 50 ரூபாய்க்கு வருவாரா? இது ஒன்றே போதும், தினமும் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள. பக்கத்தில் இருக்கிற பாலக்காட்டில் 50 ரூபாய்க்கு 5 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்.

- அப்துல் அஜீஸ் பாகவி,கோயம்புத்தூர்.

SCROLL FOR NEXT