‘நேரு மீது கொலை வெறி ஏன்?’ என்ற தலையங்கம் பாராட்டக்கூடியதாகவும் சிந்தனைக்குரியதாகவும் உள்ளது. 'எந்தக் கொலையை யார் செய்திருக்க வேண்டும், யார் யார் கொலை செய்யப்பட்டிருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும் என்ற வக்கிர சிந்தனையெல்லாம் நிச்சயம் ஆரோக்கியமான மனங்களிலிருந்து வெளி வராது' என்ற தங்களின் எழுத்துகள் ஆர்எஸ்எஸுக்குச் சரியான சவுக்கடி. காந்தியைக் கொன்ற இந்தக் கும்பல், தற்போது நேருவைத்தான் கோட்சே கொன்றிருக்க வேண்டும் என்று கூறுவது தனது கருத்தை எதிர்ப்பவர்களைக் கொலை செய்யலாம் என்ற நச்சுக் கருத்தை விதைப்பதாகவே உள்ளது.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு) உலகனேரி.