இப்படிக்கு இவர்கள்

‘தமிழகம்’ இணையதளம்

செய்திப்பிரிவு

‘இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள்’ பற்றிய கட்டுரையில் மிக முக்கியமான ஒருதளம் எனக்குத் தெரிந்து விடுபட்டிருந்தது. அது தமிழகம் (www.thamizhagam.net). தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை இத்தளம் கொண்டிருக்கிறது. அ.க. நவநீத கிருட்டிணனில் துவங்கி ஜலகண்டபுரம் கண்ணன் வரையிலான பன்முகப் படைப்பாளிகளின் நூற்றுக்கணக்கான நூல்களை இங்கு காணலாம். மேலும், எளிதில் தரவிறக்கிக்கொள்ளும்படியான தளத்தின் தொழில்நுட்பமும் சிறப்பு. லா.ச.ரா, ரா.பி. சேதுப்பிள்ளை, அயோத்திதாசர், குன்றக்குடி அடிகளார், விந்தன் போன்றவர்களின் அச்சில் தற்சமயம் காணக்கிடைக்காத நூல்களை நான் தமிழகம் இணையதளத்திலிருந்தே தரவிறக்கினேன். இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவசியம் பார்வையிட வேண்டிய இணையதளம் இது.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT