இப்படிக்கு இவர்கள்

நெகிழவைத்த செய்தி

செய்திப்பிரிவு

வியாழன் வாசிப்புப் பகுதியில் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்ட அபு இப்ராஹிம், தான் இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்னும் தன் உடலைப் பார்க்க வருபவர்களுக்கும் புத்தகங்களைப் பரிசளிக்கச் சொல்லியதும் அதை அவர் மகன் நிறைவேற்றிய செய்தியும் நெஞ்சை நெகிழவைத்தது.

இதே போல எனது தந்தையும், திருக்குறள், பாரதியார் பாடல்கள், மகாத்மா காந்தியின் சத்திய சோதனை போன்ற நூல்களைத் தனது இறுதி நாட்கள் வரை தன்னைப் பார்க்க வருவோர்க்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார் என்பதை நினைக்கும்போதே மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

- வீ.க. செல்வக்குமார்,சென்னை.

SCROLL FOR NEXT