‘மெல்லத் தமிழன் இனி..' தொடரில் வெளியான ‘இங்கே குழந்தைகளுக்குப் பொறுப்புகள் அதிகம்' பகுதியைப் படித்தேன், கண்கள் பனித்தன. தாயைப் பராமரிக்கும் குழந்தைகளும் இங்கு உண்டு என்கின்ற வித்தியாசமானதொரு செய்தி, குடிநோயாளிகள் உள்ள வீட்டின் மூலம், இந்த சமூகத்துக்குத் தெரியவந்தது.
தனி மனிதனின், பாழாய்ப்போன இந்தக் குடிப்பழக்கம், முதலில் தன்னைக் கெடுத்து, மெல்லக் குடும்பக் கவலைகளை மதுவுக்குக் கடத்தி, தான் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்க ஆரம்பித்தது. பிறகு சுற்றத்தாரிடம் சுயமரியாதையை இழந்து, ஒட்டுமொத்தமாக குடும்பத்தை தெருவிலே நிறுத்தி, கடைசியில் தான் சார்ந்த சமூகத்தையும் கெடுக்கிறது. இக்கொடிய பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டுமாயின், அரசு மதுவிலக்கை மெல்லமெல்ல நடைமுறைப்படுத்தி, சமூகத்தில் தக்க மாற்றம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான், குடும்பங்களில் ‘நிம்மதி' என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவரும்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.