‘உயிரின் மதிப்பு இவ்வளவுதானா?’ என்ற தலையங்கம் பல கேள்விகளை முன்வைத்துள்ளது.
ஒரே ‘வாமர்’ சாதனத்துக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டதும், குழந்தைகளின் மரணம் குறித்த செய்திகள் வெளியான பின்னர், ஒரு ‘வாம’ருக்குள் ஒரு குழந்தையை வைத்து கணக்குக் காட்டியிருப்பதும் நியாயமற்ற செயல்கள்.
தவிர, தேவையான சாதனங்களை அவசர அவசரமாக வழங்கிவருவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அரசு மருத்துவமனையில் அவசர அவசரமாகச் சிகிச்சையளித்துவிட்டு, தமது சொந்த மருத்துவமனைக்கு ஓடுவதை மனசாட்சி உள்ள மருத்துவர்கள் மறுக்க முடியுமா?
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.