இப்படிக்கு இவர்கள்

ராமானுஜர் கனவு

செய்திப்பிரிவு

ராமானுஜருக்குத் தனிக் கோயில், அவரது ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி சேலத்தில் அமையவிருப்பதான செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சாதிப் பாகுபாடின்றி அனைத்து இன மக்களும் கோயிலுக்குள் வந்து இறைவழிபாட்டில் ஈடுபட வழி ஏற்படுத்தினார் என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 1973-ல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டம் பிறப்பிக்கப்பட்டும், அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர்களுக்கான பயிற்சியை சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அளித்தும், இன்னும் அது நடைமுறைக்கு வராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. ராமானுஜருக்குத் தனிக் கோயில் கட்டுவதோடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றப்பட்டும் அதை நடைமுறைப் படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போடுவதைத் தடுத்து நிறுத்தி, பயிற்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக அர்ச்சகராகப் பணியில் அமர்த்தப்பட்டால்தான் ராமானுஜரின் கனவை நிறைவேற்றியதாகப் பொருள்.

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு),உலகனேரி.

SCROLL FOR NEXT