‘தி இந்து’ நாளிதழில் 27.10.2014 அன்று வெளியான வ.ரா-வும் மீட்கப்பட்ட கடிதங்களும் கட்டுரை படித்தபோது, வ.உ.சி. எழுதிய கடிதம் என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. அதில் வ.உ.சி. தனக்குள்ள தேசப்பற்றை வெளிப்படுத்தியிருப்பதையும், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து வாங்கித்தந்த சுதந்திர இந்தியா, இன்று ஊழலிலும் லஞ்சத்திலும் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பது, நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனா என்ற கேள்வி எழுகிறது.
- ம.மீனாட்சிசுந்தரம்,சென்னை.