இப்படிக்கு இவர்கள்

பால்பாண்டியின் மனிதநேயம்

செய்திப்பிரிவு

‘மெல்லத் தமிழன் இனி' தொடரில் ‘குடிப் பழக்கத்துக்கு எதிரான குழந்தைப் போராளிகள்’ கட்டுரையில், ஒரு சாதாரண கட்டிடத் தொழிலாளியான பால்பாண்டியின் மனிதநேயம் போற்றுதலுக்குரியது. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைத் தனியொரு ஆளாகச் செய்யும் அவர் பாராட்டுக்குரியவர். ‘மனிதநேயக் காப்பகம்’ தொடங்கி பத்தாண்டுகளாகக் குடி நோயாளிகளின் குழந்தைகளை மீட்டு, கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைக்கச் செய்துவருகிறார். சொந்தங்கள் இல்லாமலேயே சொர்க்கத்தை உருவாக்கியிருக்கும் அந்தக் குழந்தைகளை வாழ்த்துவோம்.

- மு. மகேந்திர பாபு,மதுரை.

SCROLL FOR NEXT