‘வினோபா பாவே - காந்தியம் உருவாக்கிய அதிசயம்! இது நூறு சதவீத உண்மை. கூட்டம் நிறைந்த கும்பலான அரசியல் மேடைகளைவிட, அமைதியான ஆக்கப் பணிகள் வலிமை மிக்கவை என்பதில் வினோபா நம்பிக்கை உடையவர். அதனால்தான், வினோபாவை முதல் சத்தியாக்கிரகியாகத் தேர்ந்தெடுத்ததாக காந்தியடிகள் அறிவித்தார். பூதான இயக்கத்தைப் பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ ‘நிலங்களைக் கொடுக்கும் கடவுள்’ எனவும் ‘அன்பால் மனிதர்களைப் பறிப்பவர்’ எனவும் வர்ணித்தது. சுதந்திர இந்தியாவில் காந்தியத்துக்காக உழைத்த வினோபா பற்றி நேரு பின்வருமாறு கூறினார் “காந்தியடிகளுடையதும் இந்தியாவினுடையதுமான உயிர் நாடியை வினோபா போல் வேறு எவரும் பிரதிபலிக்கவில்லை; பிரதிநிதிப்படுத்தவுமில்லை.” ஆம், காந்தியடிகளும் இந்தியாவும்தான் வினோபாக்களை உருவாக்க முடியும்.
- சீ. குமார்,சிக்கல்.