இப்படிக்கு இவர்கள்

நலமாக உள்ளார்

செய்திப்பிரிவு

‘தி இந்து’ நலம் வாழ இணைப்பில் ‘எங்கே இருக்கிறான் அந்த எதிரி?’ என்னும் கட்டுரையில் ஜெயபிரகாஷ் பற்றி தகவல் உள்ளது. அவர் தற்சமயம் என்னுடன் உள்ளார். குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்று, தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றதால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளிவந்தார். நான் மாநிலச் சிறைச்சாலைகள் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தேன்.

அதனால், அவரிடம் தொடர்பு உண்டு. விடுதலை பெற்றவுடன் என்னை அணுகினார். அவருக்கு உதவிகளைச் செய்துவருகிறேன். அவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களைப் படிக்கவைக்கிறார். அவர் மனநலத்துடன் இருக்கிறார். அவருக்கு பாரனாயிட் (Parnoid) என்கிற மனநோய் இல்லை என்பதைத் தெரிவிக்கவே இதனை எழுதுகிறேன்.

- டாக்டர் ஜி. ராஜமோகன்,மனநல சிகிச்சையாளர், சென்னை.

SCROLL FOR NEXT