ராம்பாலின் சொர்க்கபுரி ஆசிரமம் பற்றிப் படித்தேன். நம் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நமக்கு நிகழக்கூடியவற்றின் மீதான கட்டுப்பாட்டினை நாம் இழக்க நேரிடும்போது, நம்முடைய வாழ்க்கை விதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது என்று நம்புகிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ள சாமியார்களும் ஜோதிடர்களும், சடங்குகளினாலும் புனைசுருட்டினாலும் மக்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால், உங்களை நீங்களே சுயவிமர்சனம் செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியில்லை.
- இரா.மீ. தீத்தாரப்பன்,ராஜபாளையம்.