‘வரலாற்றை மறந்தவர்களின் அணி’ தலையங்கம் மூன்றாவது அணியின் வரலாற்றை அலசியிருந்தது. எப்போதுமே மூன்றாவது அணிக்கு அதிகாரமே குறியாக இருந்துள்ளது. ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைந்த அணியும் அதிகாரப் போட்டி காரணமாகவே சிதறுண்டது. அடுத்து அமையப்பெற்ற அணிகளும் அவ்வாறே. மக்களுக்கான திட்டங் களை முன்னிலைப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
தேர்தல் அறிவித்த பின்பு அவசர அவசரமாக ஒன்றுகூடி கூட்டணி அமைத்தால் தோல்விதான் மிஞ்சும். இன்றைய சூழலில் மாற்று அரசாங்கம் தீர்வாகாது. கவர்ச்சியான வெற்றுக் கோஷங்கள் இல்லாத; மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள்தான் மாற்று அரசியலைத் தர முடியும். மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும்.
- முத்தையா கண்ணன்,மின்னஞ்சல் வழியாக…