எப்போது கச்சத்தீவு இலங்கை அரசுக்குத் தாரைவார்க்கப்பட்டதோ அப்போதிலிருந்தே தழிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு பாதுகாப்பு என்ற பெயரில் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என குற்றம் சுமத்தி வலைகளை, படகுகளைச் சேதப்படுத்தினார்கள்; மீனவர்களைத் தாக்கினார்கள். இன்று தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றுவதும் மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையும் சமீப காலமாகக் கொண்டிருந்த இலங்கை இன்று தூக்குக் கயிற்றுக்கு முன் தமிழக மீனவர்களைக் கொண்டுசென்றிருப்பது பாகிஸ்தான் போல தானும் ஒரு எதிரி நாடாகவே இருக்க விரும்புகிறோம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்தும் முயற்சியே என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாண்டு தூக்கு தண்டனையிலிருந்து தமிழக மீனவர்களைக் காப்பற்ற வேண்டும்.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.