பெண் இன்று இணைப்பில் (நவம்பர் 2) ‘ஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா?’ என்கிற கட்டுரை, மிகவும் அரிதாகப் பேசப்படும் முரண்பாடுகளின் மீது வெளிப்பட்டிருக்கும் அற்புத சொற்சித்திரம். ‘உலக மகளிர் தினம்’ என்ற பேச்சைக் கேட்டதுமே பதற்றம் அடைபவர்கள் உண்டு.
‘எங்களுக்கு ஆண்கள் தினம் கிடையாதா’ என்று கேட்கும் எத்தனையோ பேரைக் கடந்திருக்கிறேன். பெண்களுக்கு வாக்குரிமை இல்லாதிருந்த காலத்தை நமது ஊடகங்களும் பேசுவதில்லை. மகளிர் தினம் பெண்களுக்கான உரிமைகளைக் கேட்டு முகிழ்ந்த ஒன்று, ஆண்களுக்கு எதிரான பிரகடனம் அல்ல.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.