இப்படிக்கு இவர்கள்

தீர்வுகள் எளிது

செய்திப்பிரிவு

வேலையைக் காதலி - தன்னம்பிக்கைத் தொடரில், ‘வலிகள் வருவது ஏன்?’ நல்ல மருத்துவக் கட்டுரை. தரையில் உட்கார்ந்து சகலமும் செய்த நம் முன்னோர்கள் முதுகு, மூட்டு வலியால் அவதிப்படவில்லை. இன்று சற்றே முரடான நாற்காலியில்கூட நாம் அமர்வது இல்லை.

மெத்தென்ற சோபாவில்தான் அமர்கிறோம். இதமான காலணிகளைத்தான் அணிகிறோம். கூப்பிடு தூரத்துக்குக்கூட நடந்து செல்வதைத் தவிர்த்து, வாகனங்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால், நடைப் பயிற்சி என்று தனியாகச் செய்கிறோம். சொகுசு வாழ்க்கையும், சோம்பல்தனமும் கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு இவ்வலிகள் வாராதிருந்தால்தான் அதிசயம். டாக்டர். கார்த்திகேயன் சொல்லும் தீர்வுகள் எளிதானதுதான். பின்பற்றிப் பயன்பெறுவோம்.

நூர்தீன்,சோளிங்கர்.

SCROLL FOR NEXT