சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுப்பது அவர்கள் உரிமை. ‘சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எப்போது கூட்ட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்' என ஆணவமாக முதல்வர் பன்னீர்செல்வம் அளித்திருக்கும் பதில் முறையற்றது. சட்டசபையைக் கூட்டினால் எதிர்க் கட்சியினர் குழப்பம் செய்வார்கள், வெளிநடப்பு செய்வார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுவது அரசுக்கு அழகல்ல. எதிர்க் கட்சியினருக்கு வாய்ப்பளித்து, சட்ட சபையை நடத்தி சட்டசபை மாண்பைக் காப்பதுதான் அரசுக்கு நல்லது.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.