‘சொந்த வீடு' இணைப்பிதழில் வெளியாகும் படங்கள் சிறப்பாக உள்ளன. சுடுமண்ணில் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்தலாம் என்ற செய்தியும், 58 ஆண்டுகளாக ஷியா யாங்க்சேன் என்ற பணக்காரர் சிப்பிகளைக் கொண்டு தன் வீட்டை அழகுபடுத்தி தனிமையை இனிமையாக்கிய செய்தியும் சுவாரசியமாக இருந்தன. அதே நேரத்தில் ‘வீட்டைப் பராமரியுங்கள்' என்று சொல்லிவிட்டு, பல முறை சொல்லப்பட்ட விஷயங்களையே மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது புது ஆலோசனைகளைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.
- ஜே. லூர்து,மதுரை.