‘தளைகள் அறுபட வேண்டும்’ என்கிற தலையங்கம் பெண்ணுக்குத் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தைத் தெளிவாகக் காட்டியுள்ளது. மகாகவி பாரதியார் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பாமரரும் அறியும்வண்ணம் எடுத்துரைத்துள்ளார். மேலும், பெண்களை உயர் கல்விக்கு உயர்த்திச் சென்றதில் அறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. தற்போது குழந்தைத் திருமணம் குறைந்துவிட்டதைப் போல காலப்போக்கில் பெண்கள் முன்னேற்றதைத் தடுக்கும் அனைத்துத் தளைகளும் கல்வியால் அறுபடும் என்பது திண்ணம். அப்போது சட்டம் பயனற்றதாகிவிடும்.
- எ.வி.எம். சாமி,வெள்ளாளங்குளம்.