இப்படிக்கு இவர்கள்

விடிவு எப்போது?

செய்திப்பிரிவு

‘மெல்லத் தமிழன் இனி..!' கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இளம் வயதிலேயே ஆண்களும் பெண்களும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, சீரழிகிற குடும்பங்களை நினைத்தால், வேதனையாக உள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே, ஒரு பக்கம் சாமான்ய மக்களைக் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்குகிறது. மறுபக்கம் இலவச அரிசி, இலவச வேட்டி-சேலை, ஓட்டுக்குப் பணம் மற்றும் பொருட்கள்- இப்படியே இலவசங்களைக் கொடுத்து, மக்களை அதிகப்படியாக சோம்பேறிகளாக்கி, எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல், மனைவி-குழந்தைகளின் எதிர்காலம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல், தொடர்ந்து குடித்தே தனது குடும்பத்தைச் சீரழியச் செய்யும் ஒரு கொடுமையை இங்கு தவிர, வேறு எங்கும் காண முடியாது. மதுக் கடைகளை மெல்ல மெல்ல அரசே மூட நடவடிக்கை எடுத்தாலொழிய, சாமான்ய மக்களுக்கு விடிவுகாலம் பிறக்காது.

- பி. நடராஜன்,மேட்டூர்அணை.

SCROLL FOR NEXT