இப்படிக்கு இவர்கள்

பெண்களைப் போற்றுவோம்

செய்திப்பிரிவு

ஞாயிறு களத்தில் ‘பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ கட்டுரை வாசித்தேன். குடும்பத்தை நிர்வகிக்கப் பெண் இருந்தால் மட்டுமே அந்தக் குடும்பம் பெருமை பெறும்.

பெண்ணாய்ப் பிறந்தால், கள்ளிப் பாலுக்கும் கழிவுநீர் சாக்கடையிலும் மூச்சடைத்துப் போகிற அவலங்கள் இன்னும் தொடர்வது வேதனை. இன்றைக்கும் இரண்டாம்பட்சமாகவே பெண்கள் நடத்தப்பட்டுவருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஓடும் நதிகளையும் மண்ணையும் பெண்ணாக நினைத்துப் போற்றுகிற நாம், தோழியாக, சகோதரியாக, தாயாக மதித்து அவர்களைப் போற்றுவோம்.

- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.

SCROLL FOR NEXT