‘ஆவின் பாலும் பொருட்பாலும்’ கட்டுரையில், உற்பத்தியாளரின் நியாயத்தை வெளிப்படுத்தியிருந்ததால் நுகர்வோரின் வேதனைகளை அறியவில்லை என நினைக்கிறேன். பால் விலை உயர்வுக்குக் காரணம் சொல்வதைப் போல மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம் போன்றவை அதிகரிக்கும்போது மட்டும் நம் மனம் ஏற்க மறுப்பது ஏன்? பால் என்பது உணவுப் பொருள் மட்டுல்ல; அது உயிர்ப் பொருள். அன்றாடம் உழைத்து வயிற்றைக் கழுவுகிற அடித்தட்டு மக்களின் உணவே டீயும் பாலும்தான். அதுவும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற ஆவின் பால் மோசடியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவே இல்லை. அதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிரடியாகக் கூட்டுவதும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு நியாயம் சொல்ல முயல்வதையும் நுகர்வோர் ஏற்க மாட்டார்கள்.
- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.