‘வ.ரா-வும் மீட்கப்பட்ட கடிதங்களும்’ அற்புதமான கட்டுரை. ஆவணப் புதையலை நோக்கிய பயணம் அது. தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கடிதங்கள். ஒன்று, தமிழை நேசித்த பாரதிதாசன் தொடர்பானது. அக்கடிதம், இந்து சமயத்தில் சீர்திருத்தம் செய்த ஸ்ரீ ராமானுஜர் பற்றிய திரைப்படம். இரண்டாவது கடிதம், வ.உ.சி. வ.ரா-வுக்கு எழுதியது. மிக அற்புத தருணத்தில் அல்லவா எழுதப்பட்டுள்ளது. அண்ணா மற்றும் வ.ரா. தொடர்புகொண்ட சங்கதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தக் கருத்துகள் கொண்டது. நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. இது போன்ற கடித இலக்கியம், அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் அறிய பணி.
- பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்,மதுரை.