இப்படிக்கு இவர்கள்

நிலைநாட்டப்பட்ட நீதி

செய்திப்பிரிவு

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கட்டுரை, மாதொருபாகன் நாவலின் தடை குறித்த பல பரிமாணங்களை விவரிக்கிறது.

இந்திய நாட்டின் பெருந்துயரங்களில் ஒன்று பிள்ளையில்லாத் தம்பதியர்படும் துயரம். மலடி என்ற சொல்லடியை நேரடியாகவும் மறைமுகமாகவும் படும் பெண்களின் பெருந்துயரத்தைத்தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் பேசுகிறது.

நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து, ஊர் ஊருக்கு கருத்தரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள இக்காலத்திலேயே குழந்தைப் பேறு இல்லாதவர்கள் படும்பாட்டைச் சொல்ல முடியவில்லை. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் நிலை பற்றி சொல்ல வேண்டுமா?

அவர்களிடம் அன்று இருந்த பழக்க வழக்கம், வட்டார நடைமுறைக்கு ஏற்ப என்னென்ன நடைமுறைகளைக் கையாண்டார்கள் என்பதைப் பற்றி நாவல் பேசுகிறது.

புண்பட்ட மக்களின் வாழ்நிலையை எடுத்துக்கூற முனைந்த பெருமாள் முருகன் இதுவரை பட்ட துயரம், அம்மக்கள் பட்ட துயரங்களைவிடக் கொடிது. படைப்புச் சுதந்திரம் நிலைநாட்டப்பட 'தி இந்து' அன்றே குரல் கொடுத்தது. இன்று அது சரியென நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக் கொண்டுசென்ற எழுத்தாளர் சங்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

- பேரா.நா.மணி, ஈரோடு.

SCROLL FOR NEXT