டாக்டர் ஆர். கார்த்திகேயனின் ‘போரடிக்குதே என்ன செய்யலாம்?' கட்டுரை மிகுந்த மனநிறைவைத் தந்தது. ‘பணியிடத்திலோ வெளியிலோ நீங்கள் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசியுங்கள்' - வாழ்க்கைத் தத்துவத்தை இதைவிட யாராலும் எளிதாக, அழகாக, தெளிவாகக் கூற முடியாது.
பிறரைச் சந்தோஷப்படுத்தும்போதுதான் நமக்கும் சந்தோஷம் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ‘பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலே போதும். நல்ல எண்ணங்கள் அலைகளாக மாறி உலகையே இன்பம் நிறைந்ததாக மாற்றிவிடும்' என்று எப்போதோ படித்த ஒரு துறவியின் கூற்றை எதிரொலிப்ப தாகவே அமைந்திருக்கிறது இக்கட்டுரை.
- ஜே. லூர்து,மதுரை.