இப்படிக்கு இவர்கள்

ஊக்க மருந்து

செய்திப்பிரிவு

வேதாத்ரி மகரிஷியின் மனவளக் கலை பயிற்சியால், மது எனும் அரக்கனின் கோரப் பிடியிலிருந்து, துவரங்காடு கிராம மக்களை மீட்ட உலக சமுதாய சேவா சங்கத்தை நெஞ்சார வாழ்த்துவோம்.

கிராம சேவைத் திட்டத்தை ஆரம்பித்து, கிராமங்களைத் தத்தெடுத்து, மிகக் குறுகிய காலத்தில் இந்த அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்ட வழிவகுத்த அதன் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தத்தையும், சமுதாய மாற்றத்துக்கான நல்ல செய்திகளைத் தேடிப்பிடித்து, ஒரு பக்க அளவில் வெளியிட்ட ‘தி இந்து’ தமிழையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சமூகப் பணியாற்றும் பல நல்ல உள்ளங்களுக்கு இத்தகைய செய்திகள், அவர்கள் தொய்வின்றிப் பணியாற்ற ஊக்க மருந்தாக அமையும்.

- வீ.க. செல்வக்குமார்,சென்னை.

SCROLL FOR NEXT