‘உடல் பலத்தை மிஞ்சிய அறிவு பலம்' என்ற கட்டுரையில் யானைகளைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியும், சொல்லியிருப்பது சிறுவர் மட்டுமல்ல, பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலான அருமையான பதிவு. உருவத்தில் மட்டுமல்ல, மனித நேயத்திலும் யானைகள் மனிதர்களை விஞ்சி நிற்கின்றன என்ற வரிகள் நமக்கு வியப்பைத் தருகின்றன.
தண்ணீர் தேடி, சாலைகளில் யானைகள் குறுக்கே நடந்து போகும் காட்சிகள், வயல்வெளிகளில் பயிர்களை அழிக்கும் காட்சிகள்- இவையெல்லாம் நாளிதழ்களில் அன்றாடச் செய்திகள். யானைகள் வசிக்கும் இடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதன் விளைவு, தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக யானைகள் ஊருக்குள் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் இல்லாமல் விலங்குகளும், விலங்குகள் இல்லாமல் மனிதர்களும் வாழ்வது முழுமையான வாழ்க்கை இல்லை என்ற கட்டுரையாளரின் கூற்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.