‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடர் கட்டுரைகள் காலத்துக்குத் தேவையானவை. மதுவுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி. அதற்கு மூளை வேலை செய்ய வேண்டுமே. அதைத்தான் மழுங்கடித்தாகிவிட்டதே. சிறு வயதிலேயே கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்டேன். இன்றும் மறியல் செய்ய உள்ளம் துடித்தாலும் வயது தடையாக இருக்கிறது. ஏழை முதல் பணக்காரர் வரை மதுவின் பிடியில் சிக்கி மறைந்துபோவதைப் பார்த்துள்ளேன். மதுவினால் உயிரிழந்தவரது இறுதிக் காரியங்களின்போது மயானங்களில் வீர சபதம் எடுப்பார்கள். இனி நாம் குடிக்கக் கூடாது என்று. விரைவில் காற்றில் விடப்பட்டு அவரது உடலும் மயானத்துக்கு வரும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.