ரெஹானா ஜப்பாரியின் வலிமை மிக்க குரல், ஒரு மரண சாசனம்போல் ஒலிக்கிறது. நமது காலத்தில் அறங்கள் தாழ்ந்து பணிந்து கிடக்க, அநீதியும் அராஜகமும் எப்படித் திமிரோடு கோலோச்சுகிறது என்ற உண்மை அதிர்ச்சியாக நம்மைத் திணறடிக்கிறது. எக்காலத்திலும் யாரும் பதில் சொல்லாமல் தப்பித்துவிட முடியாதவை ரெஹானவின் சொற்கள்! ‘நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம், நீதி நாட்டுவோம்' என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். உலக சமூகத்துக்கு அந்தக் கடமை இருக்கிறது, ஏனெனில் ஈரானில் மட்டும் நடப்பதல்ல இத்தகைய கொடுமைகள்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.