‘பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்’ என்கிற கட்டுரை படித்தேன். பார்வையற்றோரின் நிலை உயரக் கல்விதான் முக்கியம் எனக் கருதி வெளிநாடு வாழ் இந்தியரான டி.கே. பட்டேல் செய்துவரும் உதவிக்கு நாம் நன்றி சொல்வது ஈடாகாது.
நமது நாட்டில் வாழும் பணம் படைத்தவர்கள் பார்வையற்றவர்களின் அறிவுக்கண் திறக்கவும், அவர்களின் வாழ்வு சிறக்கவும் உதவ முன்வர வேண்டும். கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லிக்கொள்வதில் நமக்குப் பெருமையில்லை. அவர்களின் வழி நடக்கவும், நம்மை ஈடுபடுத்திக்கொள்வதிலும்தான் நமக்குப் பெருமை.
- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.