‘பெருவணிகத்தின் அகோரப் பசி’ என்ற தலைப்பில் வெளியான ‘தி இந்து’வின் தலையங்கம், இன்றைய காலகட்டத்தின் அவசியமான பார்வையாகும்.
சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுவந்த நம் தேசத்தின் ஒட்டுமொத்த வணிகர்களும் தங்கள் வணிகத்தில் தற்போது எதிர்நோக்கிய பின்னடைவுகுறித்த காரணம்கூட அறியாமல் செய்வதறியாது நின்றுகொண்டிருந்த நிலையில், இந்தப் பிரச்சினை வணிகர்களையும் நுகர்வோரையும் எங்கு கொண்டுபோய் நிறுத்தப்போகிறது? சில்லறை வணிகம் செய்வோர் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - தற்போது இணைய வர்த்தகம் மூலம் பெருநிறுவனங்கள் வழங்கும் நிரந்தரமற்ற அசுரத் தள்ளுபடியினால் ஈர்க்கப்படும் நுகர்வோர்கள் - இதுபோன்ற அதிரடித் தள்ளுபடி வணிகம் ஏற்படுத்தும் எதிர்வினை புரியாமல் வேடிக்கை பார்த்த அரசு - என்ற முப்பரிமாணத்தில் தலையங்கம் அமைந்துள்ளது.
- முஹம்மத் முஸ்தபா,கோவை.