இப்படிக்கு இவர்கள்

சாதனைப் பட்டியல்

செய்திப்பிரிவு

இடைநிலைக் கல்விக் குழுவின் பரிந்துரையை ஏற்று அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் பத்தாண்டுப் பள்ளிக் கல்வி, பதினோராம் ஆண்டு மேனிலைக் கல்வி என்ற திட்டத்தை 1962-ல் செயல் படுத்தினார். அவரை அடுத்து வந்த கல்வி அமைச்சர்

எம். பக்தவத்சலம் 11 ஆண்டுப் படிப்பைப் பத்தாண்டுகளாகக் குறைத்தால், கல்வி அஜீர்ணம் உண்டாகுமென்று 11 ஆண்டுப் பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்தார். மீண்டும் மேனிலைக் கல்வி தமிழ்நாட்டில் வந்திட 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி யிருந்தது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தை உருவாக்கி, பள்ளிப் பாடநூல்களை நாட்டுடமையாக்கியதும், கல்லூரிகளுக்கான தமிழ்வழிப் பாடநூல்களை வெளியிடச் செய்ததும் அவரது சாதனைப் பட்டியலில் சேர்க்கலாம். கல்வி அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருந்தபோது வருகிற அனைத்துக் கடிதங்களுக்கும் பதிலெழுதுவார். இன்று இம்முறை மறைந்தது. இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வலிமையை உணராது அடக்க முற்பட்டது அவருக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. காங்கிரஸ் நிரந்தரமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட வித்திட்டது.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

SCROLL FOR NEXT