ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் ஏதாவது ஒரு போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான். போராட்டம் என்பது வாழ்வின் அங்கம். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கோ போராட்டமே வாழ்க்கை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக இந்த உலகில் எதையும் விட்டுக்கொடுப்பாள்.
பெற்ற இரு பிள்ளைகளையும் பார்க்க நேரமில்லாமல் கடுமையாகப் பயிற்சி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது நாட்டுக்காகப் பங்கு பெற்ற சரிதா தேவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை அநியாய மானது. தன்னுடைய இத்தனை நாள் போராட்டம், கனவு, லட்சியம் அனைத்தும் தன் கண்முன்னே தூள்தூளாவதைக் கண்டு யார்தான் பொறுத்துக்கொள்வார்கள்? நீதிபதிகளை எதிர்க்க முடியாமல், தன் பதக்கத்தை சரிதா தேவி உதறித்தள்ளியது சரியே.
- பா. சாதனா,தூத்துக்குடி.