இப்படிக்கு இவர்கள்

எபோலா ஞாபகம்

செய்திப்பிரிவு

எபோலா நோய் தொடர்பான பதின்பருவப் பெண்ணின் வாக்குமூலத்தைப் படித்து அதிர்ந்துபோனேன். இளம்பெண் ஒருவரின் பார்வையிலிருந்து விரிந்த அந்நோய் குறித்த விவரணை, நேரடிக் காட்சிகளாக எனக்குள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. எபோலா நோயின் காரணமாக ஒரு நகரின் இயல்பு வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாக அப்பெண் சொல்லக் கேட்கும்போது மனம் நடுங்குகிறது.

‘‘ஆம்புலன்ஸில் யாரை ஏற்றிச் சென்றாலும் அவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என நாங்கள் நம்புகிறோம்” எனும் வாக்கியத்தின் சூட்டில் தகித்துப்போனேன். இனி, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும்போதெல்லாம் என்னால் எபோலா ஞாபகத்தைத் தவிர்க்க முடியாது.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT