‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடர் கட்டுரை படிக்கும்போதே அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. மதுவால் சமூகத்துக்கு வரும் வருமானத்தைவிட சமூகத்துக்கு ஏற்படும் இழப்பு அதிகம். சமூகத்தைச் சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க எந்த அரசும் தயாராக இல்லை என்பதுதான் வேதனை. காந்தி பிறந்த நாட்டில், ஒவ்வொரு விழாக் காலத்திலும் கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது கொடுமையிலும் கொடுமை.
‘வானவில்’ மூர்த்தி,சென்னை.