‘தளைகள் அறுபட வேண்டும்’ என்ற தலையங்கம் மிகவும் அருமை. பெண்களுக்குத் திருமண வயது குறைந்த பட்சம் 21 ஆக இருக்க வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக ஏற்கத் தக்கதே. பெற்றோர் தங்கள் பாரத்தை இறக்கி விட வேண்டும் என்று கவலைப்படும்போது, அவர்கள் கல்வி அரைகுறையாகவோ அல்லது கல்லூரியை எட்டாமலேயோ முடிந்துவிடுகிறது. இந்த வாக்கியம், எப்படி பெண்களின் தற்சார்பு அவர்களின் பெற்றோர்களாலேயே மறுக்கப்படுகிறது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. தற்சார்புக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும். அதற்கு வேலை வேண்டும். வேலைக்கு பொருத்தமான கல்வி வேண்டும். எனவே, பிள்ளை பெறவும், குடும்பப் பொறுப்புகளை ஏற்கவும், குடும்ப வன்முறையினைத் தயக்கமின்றி எதிர்க்கவும் 21 வயதுதான் தகுதியான வயது.
- அ.த. பன்னீர்செல்வம்,பொன்னை-உக்கடை.