இப்படிக்கு இவர்கள்

அனுமானம் சரியா?

செய்திப்பிரிவு

தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடைபெற்று மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஜெயலலிதாவோ, புதிய முதல்வரோ அல்லது கட்சித் தலைவர்களோ கட்டுப்படுத்தாமல் இருப்பது அவர்கள் ஆசியுடன்தான் இவை நடைபெறுகின்றன என்று அனுமானிக்க வழி செய்யும். நமது நீதி வழங்கு முறையில் மேல் முறையீடுகளுக்கும், மறு ஆய்வுகளுக்கும் நிறையவே இடம் இருக்கிறது. இவ்வாறிருக்க, தெருவிலேயே நீதி கிடைக்கும் என்று நினைப்பது மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் தக்க வைத்துக்கொள்ளவே. இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

SCROLL FOR NEXT