ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ விவரிக்கும், காந்தியின் வாழ்வுபற்றிய செய்தி அருமை. ‘என் வாழ்வே என் செய்தி’ என இன்று வெளிப்படையாக எந்தத் தலைவரால் கூற இயலும். எளிய மக்களை நேசித்த, தன் வாழ்வை அவர்களுடன் உண்மையாகவே இணைத்துக்கொண்ட காந்தியின் சத்தியம், இன்றைய ஆடம்பர அரசியல்வாதிகளைப் பார்த்து நகைக்கிறது. காந்தியால் உண்டாக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமான உண்ணாவிரதம், இன்று மக்களின் சொத்துகளை அபகரித்து சிறை சென்ற அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நடத்தப்படுவது உச்சகட்ட துயர நகைச்சுவை.
- மோனிகா மாறன்,வேலூர்.