‘எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் நாம்!’ என்கிற தலையங்கம் தேசத்தின் ஒரு தலையாய பிரச்சினையைப் பேசுகிறது. உதாரணத்துக்கு, எங்கள் அலுவலகத்தில் புதிய ஆட்களை நியமனம் செய்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டன.
எங்களுக்கான இலக்குகள் வருடந்தோறும் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வேலை அழுத்தத்தையும் மன அழுத்தத்தையும் புறக்கணித்துவிட்டு, அந்த இலக்குகளை அடைந்துகொண்டிருக்கிறோம். வேலையில்லாத் திண்டாடம் ஒருபுறம், வேலை செய்ய ஆளில்லாத் திண்டாட்டம் மறுபுறம். இதில் முடிவுசெய்ய வேண்டிய இடத்தில் அரசு இருப்பதால், எவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. தீர்ந்துபோவதற்கான சாத்தியமுள்ள இயற்கை வளத்தின் மீது செலுத்தும் கவனத்தை, அரசும் கார்ப்பரேட்களும் என்றும் வற்றாத மனித வளத்தின் மீது செலுத்த மறுப்பது, நமக்கான சாபமென்று தேற்றிக்கொள்ளத்தான் வேண்டுமா?
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.