இப்படிக்கு இவர்கள்

உலக வன்மம்

செய்திப்பிரிவு

‘அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!’ மற்றும் ‘அப்பாவை அம்மாவே கொன்னுட்டாங்க’ என்ற இரண்டு கட்டுரைகளுமே இருவேறு பெண்களின் ஒரே மாதிரியான சோகக் கதைகள். நாடுகள் வேறு வேறு என்றாலும், பெண்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான துயரங்களையே அனுபவிக்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தும் ஆண்களின் மனோபாவம் எங்கும் ஒன்றுபோலவே இருப்பதை உணர முடிகிறது. ரெஹானா ஜப்பாரியும், பிருந்தாவும் பெண்மைக்கு ஆபத்து வந்தபோது வேறுவழியின்றி ஒரு உயிரைப் பறிக்கும் வேதனையான நிகழ்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சட்டங்களும் தர்மங்களும் எந்தப் பெண்ணின் மரியாதையையும் காப்பாற்றவில்லை. ஆனால், அவர்களைக் குற்றவாளிகள் என்று தண்டிப்பதில் மட்டும் குறியாக இருந்திருக்கின்றன.

- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT