இப்படிக்கு இவர்கள்

சமச்சீர்க் கல்வியின் வெற்றி!

செய்திப்பிரிவு

அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைப் புகுத்தியதன் ஒரு நல்விளைவை அறிய நேர்ந்தது. தனியார் ஆங்கிலவழிப் பள்ளியொன்றுக்குச் சென்றபோது எட்டாம் வகுப்பு அறிவியல் வகுப்புக்குச் சென்றேன்.

ஆசிரியர் தமிழ்வழி நூலிலிருந்து ஒரு பகுதியைப் படித்துக்கொண்டும் தமிழில் விளக்கியும் கொண்டிருந்தார். பின்னர் மாணவரை அவர்களது ஆங்கிலவழிப் பாடநூலில் உள்ள வினாக்களுக்கான விடைகளைப் பாடநூலில் குறிக்க உதவினார். அவரை வினவியபோது தமிழ்வழியில் புரிந்துகொள்ளவும், ஆங்கிலவழியில் தேர்வை எதிர்கொள்ளவும் இம்முறையைக் கடைப்பிடிப்பதாகக் கூறினார். ஆங்கிலவழிக் கற்றல் புரிதலை உண்டாக்காது என்பதைத் தெளிவாக அந்த ஆசிரியர் புரிந்துகொண்டிருந்தார். ஆசிரியரைப் பாராட்டிவிட்டு விடைபெற்றேன். பிற ஆசிரியர்களுக்கும் உதவவே என் அனுபவத்தை வெளியிடுகிறேன்.

- ச.சீ. இராஜகோபாலன்,கல்வியாளர், சென்னை.

SCROLL FOR NEXT