இப்படிக்கு இவர்கள்

புதிய முயற்சி

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் சிறப்பு மண்டல வானிலை ஆய்வு மையம் 2004-ம் ஆண்டிலிருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத் தீவுகள், தாய்லாந்து, ஓமன் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து அளிக்கப்பட்ட 64 பெயர்களை அவ்வப்போது இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு வரிசைக் கிரமமாக வைத்துவருகிறது. ஆனால், தற்போது ஓமன் நாட்டிலிருந்து அளிக்கப்பட்ட பெயரான ஹூத் ஹூத் என்ற பெயருக்கான முழு விளக்கம் அளித்ததோடு, அந்தப் பெயர்கொண்ட பறவையின் புகைப்படத்தையும் வெளியிட்டது, நாளிதழ்கள் எதுவும் செய்யாத முயற்சி.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT