இப்படிக்கு இவர்கள்

கருப்பு பணம்: ‘தி இந்து’ ஆன்லைன் வாசகர் கருத்துகள்

செய்திப்பிரிவு

மைக்கேல் ராஜ்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அட்டகத்தி வேலை எல்லாம் செய்து வெற்றி பெற்ற பின்னர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாமல் தவிக்கும் மோடி அவர்களே, உங்களைப் பார்த்தல் பாவமா, கோபமா இருக்கு. நீங்கள் கூறியபடி வெளி நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை நூறு நாட்களில் மீட்டு வந்தீர்களா? குறைந்த பட்சம் பதுக்கியவர்களின் பெயர்களை யாவது மக்களுக்கு தெரிய செய்தீர்களா?

சரவணன்

பட்டியலில் சிலரது பெயர்கள் விடுபட்டிருந் தாலும் கவலையில்லை. வேறு கட்சி ஆட்சி அமைக்கும்போது பழிக்குப் பழியாக மிச்சம் மீதி உள்ள கருப்பு ஆடுகளை காட்டிக் கொடுப்பார்கள். மோடியின் இந்த திட்டம் தொடரட்டும். அதேநேரம் உள் நாட்டிலேயே கருப்பு பணம் பதுக்குவோரின் பட்டியல் எப்போது வெளியாகும்?

மணி

சமீப காலமாக நீதிமன்றங்களின் செயல் பாடு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெயரளவில் வெளியிடப்பட்ட கருப்பு பணம் பதுக்கியோர் பட்டியலில் தொழிலதிபர் ஹசன் அலியின் பெயர் இடம்பெற்றது. அந்த வரிசையில், பாஜக அரசும் மூன்று பேரின் பெயரை மட்டும் பேருக்காக வெளி யிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து யோக்கியர்களின் பெயர்களும் இவ்விரு கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அதை அவர்களால் பகிரங்கமாக வெளியிட முடியாது. இதுதான் அரசியல். ஆனால் உச்ச நீதிமன்ற தலையீடு காரணமாக மட்டுமே இது சாத்தியமாகும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

கிருஷ்ணசாமி

கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டி யலை வெளியிட்டால் மட்டும் போதாது. அந்தப் பணத்தை மீட்டு நம் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அப்படி வந்தால் தான் அதை நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும். மேலும் அதில் ஊழல் பணம் இருந்தால் அவர்கள் மேல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மேலும் ஊழல் நடைபெறா வண்ணம் தடுக்க முடியும். அதைச் செய்வார்கள் என்று எதிர் பார்ப்போம்.

முகமது

இத வச்சு மிரட்டி அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களின் நோக்கம் மண்ணைக் கவ்வியது. அந்த கருப்பு பணத்தை கைப்பற்றி அரசின் கஜானாவில் சேர்க்க வேண்டும். மேலும் அந்த பணத்தை செலவழிக்கும் முறை பற்றியும் அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT