இப்படிக்கு இவர்கள்

குறுகலான பெண் சுதந்திரம்

செய்திப்பிரிவு

‘அன்புள்ள யேசுதாஸ், உங்களுக்கு ஒரு கடிதம்!’ கட்டுரை படித்தேன். பெண்கள் தாங்கள் கண்ணியத்தைக் காக்கும் செயலில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டப்படுவது ஒன்றும் தவறான காரியமல்ல.

இன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் உடைகள் மட்டுமே முக்கிய காரணம் என்று இல்லாவிட்டாலும், உடைகளும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது பெண்களை அடிமைப்படுத்தும் போக்கோ அல்லது பெண் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயலோ அல்ல. பெண் சுதந்திரம் என்பதை மிகவும் குறுகலான பொருளில் புரிந்துகொண்டிருப்பவர்களே யேசுதாஸை இதற்காகக் கண்டனம் செய்வார்கள்.

- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT